புதன், 21 டிசம்பர், 2022

மெய்யைத் தொலைத்து

 



" நாம் இப்போது எங்கே இருக்கிறோம்?" இது அந்த பெண்ணின் கேள்வி.


"தெரியவில்லை" இது அந்த பொடியனின் பதில்.


அந்த பொடியன் கையில் ஒரு தொங்கும் விளக்கைப் பிடித்திருந்தான்.


" உனக்கும் நாம் எங்கே போகிறோம் என்று தெரியாதா?" மீண்டும் கேட்டாள் பெண்.


" அவர் சொன்னபடி இங்கே நிற்கிறேன். ஒரு பெண் வருவாள் என்று சொல்லி விட்டு, நீங்கள் வந்ததும் வடக்கு பக்கமாக மோகினி சிலை இருக்கிற இடத்தில் வந்து நம்மை நிற்கச் சொன்னார்" என்றான் பொடியன்.


அப்படியா,சரி வா போகலாம்" அடர்ந்த காட்டில் அந்த பெண்ணும் , அந்த பொடியனும் வடக்குப் பக்கமாக நடந்தனர். மரங்கள் அடர்ந்து கடுமையான பாதையாக அது இருந்தது.


பிரமாண்டமான மோகினி சிலை அது. மோகினி வடிவத்தில் ஈர்க்கும் நளினமாக நின்றாள். இருவரும் அந்த சிலை நெருங்கினார்கள். சிலை சட்டென்று உயிர் பெற்றது.


" யார் பலி?" என்று உரக்கக் கேட்டது மோகினி. இந்த விளையாட்டு இந்த இடத்தில் இப்படி அமைக்கப்படவில்லையே! என்று மெய் நிகர் (VR - Virtual Reality Game) விளையாட்டைத் தன்னை கொண்டு சோதித்துக் கொண்டிருந்த நித்யா குழம்பி, மெய் நிகர் விளையாட்டு கருவியை தன் தலையிலிருந்து எடுக்க முயன்றாள். ஆனால் எல்லாம் கை மிஞ்சிவிட்டது. அந்த விளையாட்டில் இவளுடைய பாத்திரமான அந்த பெண்ணின் தலையைத் துண்டானது. நித்யா வித்தியாசமாக உணர்ந்தாள். அவள் கதாபாத்திரத்தைக் கொன்றது அந்த விளையாட்டில் தானியங்கி கதாபாத்திரமான அந்த பொடியனின் கதாபாத்திரம்.


"என்ன இது?" நித்யா வாய்விட்டுச் சொல்லும் நேரம் , அவளுக்குள் யாரோ நுழைந்து.... பிழை (Error) ..பிழை ... கணினி எச்சரிக்கை செய்தது.


நித்யா மெய் நிகர் கருவி தலையிலிருந்து எடுத்தாள். ஆனால் அவள் குணத்தால் நித்யா இல்லை.


" இது தான் நீங்கள் வாழும் உலகமா? ஹா,ஹா உங்கள் உலகத்தில் அப்படி என்ன சிறப்பு என்பதை இந்த பொடியன் அறியப் போகிறான்" என்றாள் நித்யா. அது நித்யா அல்ல; அது பொடியன்.


அந்த அறையில் முழுவதையும் புரட்டிப் போட்டாள் நித்யா. ஒரு இரும்பு தடியைக் கண்டு எடுத்தாள். அவள் இருந்தது அந்த விளையாட்டு நிறுவன கட்டிலில் எட்டாவது தளம். அந்த இரும்பு தடியைக் கொண்டு நித்யா கொன்ற நபர்களின் எண்ணிக்கை பதிமூன்று பேர். நித்யா செய்யவிருந்த பதினான்காம் கொலை ஒரு காவல் அதிகாரியின் துப்பாக்கி துண்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.


அடுத்த நாள் முக்கிய செய்தி இந்த நிகழ்வுதான். ஆனால் சிக்கல் இத்தோடு முடியவில்லை. அடுத்த வாரம் இந்த மெய் நிகர் விளையாட்டு சந்தைக்கு வரவிருக்கிறது.... மீண்டும் பொடியன் வருவான்.


(ஹாஹாஹா முற்றும்?)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோணல் (,சிறுகதை)

 கோணல் (சிறுகதை) "அந்த மரம் ஏன் வளைந்து நெளிந்து வளர்ந்து உள்ளது ?" மாடு மேய்க்கும் பையன் கேட்டான். " அது அதன் இயல்பில் இருக்...